பகவான் அனுமன் அஷ்டமா சித்தியும் கைவரப்பெற்றவராவார்
இவரே தலை சிறந்த ராம பக்தருமாவார்
தீமைகளுக்கு எதிராக வெல்வது, பாதுகாப்பு, பலம் ஆகியவற்றை அனுமன் பகவான் நமக்கு வழங்குவார்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
இது போன்ற கட்டுரைகளை தினமும் உங்கள்முகநூலில் வாசிக்க https://www.facebook.com/siddharastrology என்ற எங்கள் பக்கத்தை “லைக்” செய்யவும்

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம்,
அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும்,
தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்
அனுமன் ஜெயந்தியை கொண்டாடுபவர்களுக்கு
- அவர்களுக்கு குடும்பத்திற்கு பாதுகாப்பு
- பலம்
- தைரியம்
- குருபக்தி
- மனவுறுதி
6.சத்ருஜெயம்
ஆகியவை பகவானின் அனுக்கிரகத்தால் எளிதில் கிடைக்கும்
இன்றைய தினம் சுந்திரகாண்டம் வாசிப்பது சாலச்சிறந்தது ஆகும்
அவ்வாறு வாசிக்க நேரமில்லாதவர்கள் கீழ்க்கண்ட பகவானை நினைத்துக்கொண்டு கீழ்க்கண்ட சுலோகங்களை கூறவும்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே ! கருனைக்கடலே ! ப்ரபோ ! என்னுடைய காரியங்களை எல்லாம் சாதித்துத்தருவீராக