பிறந்த நாள் ஏன் முடிவெட்டக்கூடாது, நகம் வெட்டக்கூடாது
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உயிரியல் உடல் மற்றும் ஒரு சக்தி உடல் உள்ளது
இந்த உயிரியல் உடல் – பயாலஜிகல் பாடி – என்பது எலும்பு, சதை, நரம்பு, இரத்தம், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளால் ஆனது
சக்தி உடல் என்பது சக்தியால் ஆனது
இதை சூட்சும சரீரம் என்றும் அஸ்ட்ரல் பாடி என்றும் அழைப்பார்கள்

இந்த சூட்சும சரீரமானது நமது உடலில் உள்ள சக்கிரங்களுடன் தொடர்புடையது
இது நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது
நாம் நகம் வெட்டினாலோ, அல்லது முடி வெட்டினாலோ உடலின் ஒரு பகுதியை இழக்கிறோம்
எனவே இதற்கு ஏற்ப சூட்சும சரீரமும் மாறும்
முடிவெட்டிய / நகம் வெட்டிய இடத்தில் சூட்சும சரீரத்தில் ஓட்டை இருக்கும்
சிறிது நேரத்தில் இது சரியாகி விடும்
முடிவெட்டியவுடன் தலைக்கு குளித்தாலோ அல்லது நகம் வெட்டியவுட கையை கழுவினாலோ
இந்த சூட்சும சரீரம் விரைவில் சரியாகி விடும்
பிறந்த நாள் அன்று நமது சூட்சும உடலுக்கும், அஸ்ட்ரல் தளத்திற்குமான தொடர்பு அதிகமாக இருக்கும். எனவே
இந்த சூட்சும உடலானது நெகிழ்ந்த நிலையில் இருக்கும்
எனவே இது போன்ற தினங்களில்
சூட்சும சரீரம் புதிய நிலைக்கு வர நிறைய நேரம் ஆகும்
முடிவெட்டிய / நகம் வெட்டிய இடத்தில் சூட்சும சரீரத்தில் ஓட்டை இருக்கும்
இது சரியாக நிறைய நேரம் ஆகும்
அது வரை
நமது உடலின் சக்கிரங்களின் சக்தி எளிதில் மாறும் வாய்ப்பு உள்ளது
இதனால் சளி பிடிப்பது, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும்
இதனால் தான்
- முடிவெட்டியவுடன் குளிக்கவேண்டும்
2.பிறந்த நாள், நட்சத்திரம் அன்று முடிவெட்டக்கூடாது
என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்